சிவகார்த்திகேயனின் டாக்டர்! ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது!

96

டாக்டர்…

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கொரோனா ஊடரங்கு, தியேட்டர் மூடல் காரணங்களால் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

சிவகார்த்திகேயனின் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் இப்படத்தின் மீதும் ரசிகர்களின் கவனம் திரும்பியது.

பிப்ரவரி மாதத்திலிருந்து 100 சதவீத இருக்கைகளுக்கு தியேட்டரில் அனுமதி என அரசு அறிவிப்பு வந்த நிலையில் சினிமா வட்டாரம் உற்சாகமானது.

தற்போது டாக்டர் படம் வரும் மார்ச் 23 ல் தியேட்டரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.