வைரலாகுது 7 G ரெயின்போ காலனி பட பாடலுக்கு பவானி விஜய் சேதுபதி ஆடும் வீடியோ!!

494

பவானி விஜய் சேதுபதி…….

இன்றைய தேதிக்கு நெட்டிசன்கள் பண்ணும் சில பல விஷயங்கள் வைரலாகி விடுகின்றது. மீம்ஸ், ட்ரோல், காமெடி விடி யோஸ் என சமூக வலை தளங்களில் கொட்டி கிடக்கிறது. யூ ட்யூபில் பேன் எடிட் விடி யோஸ், ட்விட்டரில் பேன் மேட் போஸ்டர்ஸ் என ஒரிஜினல் போலவே ரெடி செய்கின்றனர் ரசிகர்கள்.

அவ்வப்பொழுது இப்போதைய ஸ்டைலுக்கு ஏற்ற மாதிரி ரெடி செய்து கலக்குகின்றனர். அப்படி தான் ட்விட்டரில் இந்த வீடியோ லைக்ஸ் மற்றும் ரி ட்வீட் அதிக அளவில் பெற்று வருகிறது.

இயக்குனர் செல்வராகவனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய படம் 7 ஜி ரெயின்போ காலனி. இப்படத்தில் பாடல்கள் அனைத்துமே ஹிட். ரவி கிருஷ்ணாவின் அறிமுக படம். குறிப்பாக காதலின் வலியை சொல்லும் நா முத்துக்குமாரின் “கண் பேசும் வார்த்தைகள்..” பாட்டு அப்போதைய ட்ரெண்டிங்.

மாஸ்டர் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பவானி ரோலில் நடித்திருந்தார். அவரின் காட்சியை இந்த பாடலுடன் மேட்ச் செய்து வீடியோ எடிட் செய்துள்ளனர். அச்சு அசலாக பொருந்துகிறது.