சன் டிவி சீரியலில் ஹீரோயினாக களமிறங்கும் டிக் டாக் பிரபலம்.. அ டி ச்சான் பாரு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரு!

146

சன் டிவி………

சமீபகாலமாக சன் டிவி சீரியல்கள் மக்களை பெரிய அளவில் கவறாத நிலையில் தொடர்ந்து பாதியில் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு மாற்றாக யூடியூப் மற்றும் டிக் டாக் போன்றவற்றில் பிரபலமானவர்களை வைத்து ஒப்பேற்றி கொண்டிருக்கிறது சன் டிவி.

அதுவும் சன் டிவியின் மற்றொரு சேனலான சன் மியூசிக் தொலைக்காட்சியில் முன்னர் இருந்த அளவுக்கு தற்போது சிறப்பான நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பார்த்து பார்த்து சலித்து போனவர்களை வைத்து கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்போதுமே அழகு மற்றும் கிளாமர் ஆகிய இரண்டுக்கும் பொருத்திய நடிகைகளை மட்டுமே சன் டிவி நிறுவனம் சீரியல்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது முதல்முறையாக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒருவரை தேர்வு செய்துள்ளனர்.

டிக் டாக் செயலியில் உறவினர்களுக்கு கடிதம் அனுப்புவது போன்ற கான்செப்டை வைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கேப்ரியல்லா. இவர் ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் செத்தாலும் ஆயிரம் பொன் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் புதிதாக உருவாகி வரும் சுந்தரி என்ற சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். சன் டிவி சீரியல்களில் முதல் முறையாக கருப்பு நிறத்தில் வரும் ஹீரோயின் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.