27 கிலோ உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய வித்யுலேகா ராமன்.. வேற லெவல் மாற்றம்!

119

வித்யூலேகா…..

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமா நகைச்சுவை நாயகியாக அறிமுகமானார். அறிமுகப் படத்திலேயே தனக்கென ஒரு முத்திரையை பதித்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் நடிகை வித்யூலேகா.

தெலுங்கில் தற்போது முன்னணி நகைச்சுவை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார்.

அப்பாவின் துணையால் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து தற்போது தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நாயகியாக உயர்ந்துள்ளார்.

பலமுறை இவரது உடல் எடையைப் பற்றி பலரும் கிண்டல் அடிப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்திய வித்யுலேகா சுமார் 25 முதல் 30 கிலோ வரை உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார்.

மேலும் குண்டாக இருக்கும் போதே மாடர்ன் உடைகளில் கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி அனைவரையும் கிறங்கடித்தவர் வித்யூலேகா. மேலும் குண்டாக இருப்பவர்கள் மாடர்ன் டிரஸ் போட கூடாதா என்ன? என கேள்வி எழுப்பியிருந்தார்.

தற்போது கிண்டல் செய்தவர்கள் அனைவரும் மூக்கின்மேல் விரலை வைக்கும் படி தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து வேற லெவல் அழகில் புகைப்படத்தை வெளியிட்டு தெறிக்க விட்டுள்ளார் வித்யூலேகா.