சூர்யா, ஜோதிகாவிற்காக கதை எழுதும் பிரபல இயக்குனர்.. சில்லுனு ஒரு காதல் பார்ட்-2.?

99

சூர்யா- ஜோதிகா………

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடி என்று அழைக்கப்படும் கப்பிள்ஸ் தான் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா நடிப்பதை முழுவதுமாக நிறுத்தியதோடு குடும்ப பெண்ணாகவே மாறிவிட்டார். இதனால் ஜோதிகாவின் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தனர்.

தற்போது ஜோதிகா ஸ்ட்ராங்கான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார். அதேபோல் ஜோதிகா தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த படம் தான் ‘36 வயதினிலே’. இதனைத் தொடர்ந்து ஜோதிகா பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பூவரசம் பீப்பீ மற்றும் சில்லுக்கருப்பட்டி புகழ் இயக்குனரான ஹலிதா சமீம், சூர்யாகாகவும் ஜோதிகாவிற்காகவும் ஸ்க்ரிப்ட் எழுதிக் கொண்டிருப்பதாக பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளாராம்.

அதாவது சூர்யா, ஜோதிகா ஆகியோரின் கெமிஸ்ட்ரி எப்பொழுதுமே வேற லெவலில் இருக்கும். இதனால் இருவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படம் மெகா ஹிட் அடித்தது. மேலும் ரசிகர்கள் பலரும் திருமணத்திற்கு பிறகு கூட சூர்யாவும் ஜோதிகாவும் சேர்ந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது எதுவும் இதுவரை நிறைவேறாமலே இருந்தது.

தற்போது பிரபல இயக்குனரான ஹலிதா சமீம் பேட்டி ஒன்றில் இது பற்றி,  சில்லுக்கருப்பட்டி படத்தோட 50வது நாள் வெற்றி வெற்றியை கொண்டாட சூர்யா வீட்டிற்கு போனதாகவும், அப்போது சூர்யா ‘நாங்க சேர்ந்து நடிக்கிறதுக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க’ என்று சொன்னதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதை ஹலிதா சூர்யா சும்மா சொன்னதா நினைச்சாங்கலாம்.

இதனைத் தொடர்ந்து சூர்யா ஒரு பேட்டியிலும், ஜோதிகா ஒரு விருது நிகழ்ச்சியிலும் தங்களுக்கான கதை ரெடியாயிட்டு இருக்குன்னு சொன்னப்பதான் சூர்யாவும் ஜோதிகாவும் சீரியசா இந்த விஷயத்தை சொல்லி இருக்காங்கன்னு தனக்கு தெரிந்ததாக கூறியிருக்கிறார் ஹலிதா. இறுதியாக பேசிய ஹலிதா, ‘ ரெண்டு பேருக்கும் ஏத்த மாதிரியான ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரம் அதை வெற்றிகரமாக முடித்து, அவங்கள திரைக்குக் கொண்டு வருவேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

மேலும் இந்தத் தகவலை அறிந்த சூர்யா-ஜோதிகா ரசிகர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனராம். இந்த ஸ்கிரிப்ட் வழக்கம்போல கிராமத்து கதாபாத்திரமாக இருக்குமா.? இல்ல சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா.? என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.