குட்டி ஸ்டோரி ட்ரைலர்.. ஆபாச வசனம், படுக்கையறை காட்சிகளில் மாட்டிய விஜய் சேதுபதி!!

415

குட்டி ஸ்டோரி…

தற்போதெல்லாம் தமிழ்சினிமாவில் ஆந்தாலஜி படங்களுக்கான வரவேற்பு அதிக அளவில் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தான் ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘புத்தம் புது காலை’, ‘பாவ கதைகள்’ போன்ற ஆந்தாலஜி திரைப்படங்கள் வெளியாகி ஹிட்டடித்தன.

தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி திரைப்படம் உருவாகி, இந்த மாதம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, அமலாபால், கௌதம்மேனன், அதிதி பாலன், மேகா ஆகாஷ், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ‘குட்டி ஸ்டோரி’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் பலரின் ஆர்வத்தை எக்கச்சக்கமாக தூண்டியுள்ளது.

அதாவது வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி, கௌதம் மேனன், AL விஜய் ஆகியோர் இயக்கியுள்ள ‘குட்டி ஸ்டோரி’ படம் வெளியாக உள்ளதாம். அதேபோல் இரு நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ட்ரெய்லரில் இளமையான லுக்கில் கௌதம்மேனன், ஒல்லியான விஜய்சேதுபதி, கள்ளக்காதலில் ஈடுபட்ட அதிதி பாலன், அமலா பால், மேகா ஆகாஷ், சாக்ஷி அகர்வால் என அனைவரும் தோற்றமளிப்பதால் இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் இதில் அதிக அளவு கவனத்தை ஈர்ப்பது விஜய் சேதுபதி தான் என்கின்றனர் சிலர். அதுமட்டுமில்லாமல், நலன் குமாரசாமி மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கி இருப்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவு எதிர்பார்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.