விரைவில் ஹீரோவாகும் விஜய் டிவியின் மகேஷ் சுப்ரமணியம்.. சிக்ஸ்பேக் புகைப்படத்திற்கு குவியும் வாய்ப்புகள்!!

74

மகேஷ் சுப்பிரமணியம்…

பார்த்தாலே ஹீரோவாக இருப்பாரோ என யோசிக்க தோன்றும் அளவுக்கு தன்னுடைய தோற்றத்தால் அனைவரையும் மிரள வைத்து தற்போது வெள்ளி திரையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சின்னத்திரை பிரபலம் தான் மகேஷ் சுப்பிரமணியம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 9 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்டவர் மகேஷ் சுப்பிரமணியம். அப்போதிலிருந்தே இளம்பெண்களுக்கு இவர் மீது ஒரு கண் இருந்து வருகிறது.

ஜிம் பாடி, ஹீரோவுக்கு ஏற்ற வசீகரம் என அனைத்துமே கொண்டவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். பகல் நிலவு சீரியல் ஹீரோயினாக ஷிவானி நாராயணன் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அதே விஜய் டிவியில் சிவானி நாராயணனுக்கும் ஜோடியாக கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்து வில்லன் இமேஜில் இருந்து ஹீரோ இமேஜுக்கு மாறினார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களில் தன் திறமையை நிரூபித்து வருகிறார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் அடுத்ததாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் மகேஷ் சுப்பிரமணியம். சமீபத்தில் மகேஷ் சுப்பிரமணியம் வெளியிட்ட சிக்ஸ் பேக் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.