தளபதி 65 படத்தில் கமிட்டான கே ஜி எஃப் பிரபலங்கள்.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் மாஸ் அப்டேட்!

98

தளபதி 65………..

கோலிவுட்டில் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் தற்போது பாக்ஸ் ஆபீஸில் சாதனை புரிகிறது. இதனால் தியேட்டர் ஓனர்கள் அனைவரும் விஜய்யை ‘பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி’ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் விஜயின் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்தததோடு, தளபதி வெறியர்களால் தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனென்றால் OTT தளத்தில் இந்தப் படம் வெளியாகி இருந்தாலும்கூட, இந்தப் படத்தை காண வரும் ரசிகர்களின் கூட்டம் தியேட்டர்களில் இன்றுவரை குறையாமல் தான் உள்ளதாம்.

இந்நிலையில், தளபதி 65 படத்தில் விஜய் டிவி பிரபலமான புகழும், கேஜிஎஃப் பட படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பு, அறிவு ஆகியோர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதாவது மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைக்க உள்ளாராம். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலதால் தற்போது, அருண்விஜயின் படத்திலும் (AV33),சந்தானத்தின் படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தற்போது புதிதாக தளபதியின் படத்திலும் புகழ் ஒப்பந்தமாகி இருப்பதாகவும், கேஜிஎஃப் படத்தின் சண்டை பயிற்சியாளர்களான அன்பு, அறிவு ஆகியோரும் தளபதி 65 படத்தில் இணைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது.

எனவே, தனது கடின உழைப்பினால் முன்னேறி தற்போது தளபதியின் படத்தில் நடிக்க தயாராகி இருக்கும் குக் வித் கோமாளி புகழ், புகழுக்கு அவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.