விஜய் தேவர்கொண்டா பட ரிமேக்கில் ஹரிஷ் கல்யாண்- வைரலாது ஓ மணப்பெண்ணே போஸ்டர் டீஸர்!!

84

பெல்லி சூப்புலு…..

2016 ல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் விஜய் தேவர்கொண்டா – ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ரொமான்டிக் காமெடி படம் “பெல்லி சூப்புலு”. ஏற்கனவே மலையாளம் மற்றும் ஹிந்தியில் இப்படம் ரிமேக் ஆகியுள்ளது.

தமிழில் இப்படத்தின் ரிமேக் உரிமையை இயக்குனர் கெளதம் மேனன் வாங்கினார். அவர் தயாரிப்பில் செந்தில் வீராசாமி இயக்கத்தில் விஷ்ணு விஷால் – தமன்னா நடிப்பில் உருவாக இருந்த படம் “பொன் ஒன்று கண்டேன்.” எனினும் இப்படம் ட்ராப் ஆனது.

பின்னர் ரிமேக் உரிமை கைகள் மாறியது. டிசம்பர் 2019 இல் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் படம் ஆரம்பமானது. “ஓ மணப்பெண்ணே” என்ற இப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு கிருஷ்ணன் வசந்த். இசை விஷால் சந்திரசேகர். எடிட்டிங் பணிகளை கிருபாகரன் கவனித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.