தாலியை கழற்றி வைத்துவிட்டு போட்டோஷூட்? பிக்பாஸ் சுஜா வருணி சர்ச்சைக்கு விளக்கம்!!

1042

பிக்பாஸ் புகழ் நடிகை சுஜா வருணி சென்ற வருடம் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ்வை திருமணம் செய்துகொண்டார். மேலும் சுஜா தற்போது கர்பமாக உள்ளதாக வந்த அறிவிப்பும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. விரைவில் வளைகாப்பும் நடக்கவுள்ளது.

இந்நிலையில் சுஜா வருணி தாலியை கழட்டி வைத்துவிட்டு ஒரு போட்டோஷூட் நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

ஆனால் அது 7 வருடங்களுக்கு முன்பு எடுத்தது என சுஜா விளக்கம் கொடுத்துள்ளார். “தாலியைக் கழற்றி வைத்துவிட்டு ஃபோட்டோஷூட் நடத்த, நான் அலைபாயுதே ஷாலினியும் கிடையாது” என பதில் கொடுத்துள்ளார் அவர்.