செல்வராகவன் மற்றும் SJ சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மி ர ட்டும் புதிய டீசர்!!

103

நெஞ்சம் மறப்பதில்லை……….

செல்வராகவன் படங்கள் சும்மாவே குறித்த நேரத்தில் வெளியாகாது. இதில் பைனான்ஸ் பிரச்சனை என்றால் அவ்வளவுதான். அந்த படம் கோமாவுக்கு சென்ற கதைதான். அப்படிப்பட்ட படம்தான் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை என்னதான் மாஸ் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் அதிக அளவில் சம்பளம் வாங்கினாலும், அவர்களை விட ஒரு படி மேல்தான் செல்வராகவன் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக செல்வராகவனுக்கு சிறப்பாக எதுவுமே அமையவில்லை.

ஏன் இத்தனைக்கும் முன்னணி நடிகரான சூர்யாவுடன் கூட்டணி போட்டு வெளியான என் ஜி கே படம் கூட படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் புத்துணர்ச்சியுடன் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்த செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் செல்வராகவன்.

அந்த வகையில் 2016ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா, ரெஜினா கெஸன்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியான போதே நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் மீது எக்கச்சக்க எ தி ர்பார்ப்பு ஏற்பட்டது.

சமீபத்தில்கூட நெஞ்சம் மறப்பதில்லை படம் நேரடியாக ஓடிடி இணையதளம் ஒன்றில் வெளியாகப் போவதாக செய்திகள் இணையத்தை சுற்றி வந்த நிலையில் தற்போது அதற்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாக இருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வருகின்ற மார்ச் 5ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாக போவதாக ரிலீஸ் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.