ஒரு முடிவுக்கு வந்த தல அஜித்தின் வலிமை.. ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட் இதோ!!

97

வலிமை….

விவேகம் படத்திற்கு பிறகு தல அஜித்தின் சினிமா கேரியரில் அதிக நாட்கள் படமாக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்றால் அது வலிமை தான். எத்தன நாளு! கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இடையில் தல அஜித்துக்கு அ டி பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு த டை பட்டது. மேலும் கொரானா சூழ்நிலையால் வெளிநாட்டு போர்ஷன்கள் அனைத்துமே தள்ளி வைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை எப்போது வெளிநாட்டு உரிமை கிடைக்கும் என வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தது வலிமை படக்குழு.

காரணம் அந்த பகுதியை முடித்துவிட்டால் மொத்தமாக வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விடுமாம். அதன் பிறகு தொடர்ந்து தல அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்க படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம். (மைண்ட் வாய்ஸ்:- இனிமேலாச்சும் திட்டாதீங்கப்பா!)

இந்நிலையில் சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று கண்டிப்பாக தல ரசிகர்களை குஷிப்படுத்தும் என நம்பலாம். தற்போது இயக்குனர் வினோத் மற்றும் தல அஜித் விருப்பப்படியே ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்து விட்டதாம்.

ஒரு ஸ்டைலிஷ் பைக் ச ண் டைக் காட்சி அங்கு படமாக்கப்பட உள்ளதாம். பெரும்பாலும் அதுதான் வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கும் என்கிறார்கள் வலிமை வட்டாரங்கள்.

ஸ்பெயின் செட்யூல் முடிந்துவிட்டால் மொத்தமாக வலிமை படப்பிடிப்பு முடிந்து விடுமாம்.

எப்படியாவது மே 1ஆம் தேதி தல பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தை வெளியிட்டு விட வேண்டும் என பட குழு தீயாக வேலை செய்து வருகிறதாம். இதனால் விரைவில் தல அஜித் மற்றும் படக்குழுவினர் ஸ்பெயின் பார்க்கிறார்களாம்.