அனிருத் வலையில் விழுந்த கீர்த்தி சுரேஷ்.. எல்லாத்துக்கும் இந்த ஒரு போட்டோ தான் காரணமா.?

120

கீர்த்தி சுரேஷ்….

கோலிவுட்டில் முன்னணி இளம் இசையமைப்பாளர் அனிருத். இவரது இசையமைப்பில் வெளியாகும் ஒவ்வொரு பாடலும் தனித்துவம் வாய்ந்ததாக இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் இவரது இசையமைப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தன. அது மட்டுமில்லாமல் விஜய், விஜய் சேதுபதி பேக்ரவுண்ட் பிஜிஎம்களிலும் இறங்கி, தரமாக வேலை பார்த்திருப்பார் அனிருத்.

தற்போது இவரது கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றனவாம். அவ்வளவு ஏன் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்திற்கு கூட அனிருத் தான் இசையமைப்பாளர்.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் திருமணம் நடக்கப் போவதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் வதந்தி ஒன்று தீயாக பரவி வருகிறது.

அதாவது தேசிய விருது பெற்ற நடிகை என்ற பெருமையுடன், கெத்தாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் கீர்த்தி சுரேஷும் அனிருத்தும் நீண்டகால நெருங்கிய நண்பர்களாம்.

அதேபோல் சமீபத்தில் அனிருத் பிறந்த நாள் பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கீர்த்தி, அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். அன்று தான் கீர்த்திக்கும் அனிருத்துக்கும் ஆரம்பித்தது இந்த வதந்தி பிரச்சனை. அதிலிருந்து தொடர்ந்து இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்திகள் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகின்றன.

மேலும் இந்த விஷயத்தில் கடுகளவு கூட உண்மை இல்லை என்று அடித்துக் கூறுகிறது கீர்த்தி சுரேஷின் நெருங்கிய வட்டாரம். இதற்கு மிக முக்கிய காரணம் கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே வேறு யாரோ ஒருவரை காதலித்து வருவது தான் என்றும் சொல்லப்படுகிறது.

எனவே, ‘எள்ல கொடுத்தா எண்ணெயா மாத்துற’ நெட்டிசன்கள், இந்த ஒரு போட்டோவை வைத்து கீர்த்தி- அனிருத் பற்றி பரப்பும் வதந்திகளுக்கு எல்லை இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. எப்போ இதுக்கு ஒரு எண்டு கார்டு கிடைக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.