வைரலாது மம்முட்டி பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்! இது ரஜினி கெட் அப் ஆச்சே

87

மலையாள……

மலையாள சினிமாவில் சீனியர் நடிகராக இருந்தாலும், இன்றும் அப்டேட்டுடன் இருப்பது தான் மம்மூட்டி அவர்களின் ப்ளஸ். இன்றும் ரசிகர்களின் மனதில் பாக்ஸ் ஆபிசில் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை அமைத்துள்ளார்.

மம்முட்டி நடிப்பதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்துள்ளார் . இவர் மலையாளம், இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 400 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாக் டவுன் ஆரம்பித்ததிலிருந்து கிட்டத்தட்ட 200 நாட்களாக தனது வீட்டை விட்டு வெளிவராத மெகா ஸ்டார் மம்முட்டி தோட்டக்கலை, போட்டோகிராபி என நேரத்தை செலவிட்டு வந்தார். 69 வயது என சொல்லும் பட்சத்தில் யாரும் நம்ப கூட மாட்டார்கள்.

தி பிரைஸ்ட், ஒன், பீஷ்ம பர்வம் அடுத்தடுத்து உள்ளது இவரது சினிமா லயன் அப். இயக்குனர் அமல் நீரத் உடன் கூட்டணி போடும் படம் தான் பீஷ்ம பர்வம்.

முழுக்க முழுக்க கேங்ஸ்டர் சமாச்சாரம் நிறைந்த படமாம். சோபின் சாஹிர், லேனா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்த கெட் அப் போஸ்டரை பார்த்த நம் நெட்டிசன்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா என்கிற கரிகாலன் லுக் ஆச்சே இது என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.