30 கோடி தூக்கி கொடுத்த பிரபல நடிகை.. இணையத்தில் தரிசிக்கும் ரசிகர்கள்!!

64

காஞ்சனா……..

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி, ஜெமினி போன்ற நடிகர்களுடன் அந்த காலத்தில் ஜோடியாக நடித்தவர் காஞ்சனா. காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக காஞ்சனா அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியின் மூலம் காஞ்சனாவை பிடிக்காத ரசிகர்களே இல்லை என்று கூட கூறலாம்.

அந்த அளவிற்கு தனது நடிப்பால் அதிகமான ரசிகர்களை அந்த காலத்தில் சேர்த்து வைத்திருந்தார். காஞ்சனாவின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவரை அன்போடு கலர் கட்டழகி காஞ்சனா என பெயர் சூட்டினர். அந்த அளவிற்கு திரை வாழ்க்கையில் ஏராளமான வெற்றிகளை பார்த்துள்ளார்.

பின்பு காஞ்சனா ரைஸ் மில் ஓனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சில காலங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதனால் மனமுடைந்த காஞ்சனா ஒரு சில காலங்கள் அமைதியாகவே வாழ்ந்து வந்தார்.

இப்போது இவர் சென்னையில் உள்ள டிநகரில் ஜி என் சிட்டி ரோட்டில் 1500 ஸ்கொயர் ஃபீட் திருப்பதி கோயில் கட்ட 30 கோடி நன்கொடை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு கடவுள் மீது அதிக நம்பிக்கை உள்ளவர்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் தற்போது இந்த நடிகைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் 1 கோடி, 2 கோடி இல்லை 30 கோடி கொடுத்து உள்ளதால் இந்த நடிகைக்கு கூட கோயில் கட்டலாம் எனவும் கூறி வருகின்றனர்.