பிக்பாஸுக்கு பிறகு அழுமூஞ்சி அனிதாவுக்கு அடித்த அதிஷ்டம்.. வாயுள்ள பிள்ளை பொழைச்சுக்கும்!

99

அனிதா………

நடந்த முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ரசிகர்களால் வெறுக்கப்பட்ட அனிதா சம்பத் அதன்பிறகு அதே ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார். மற்றவர்கள் செய்த அனைத்துமே அனிதாவுக்கு சாதகமாக அமைந்தது.

இந்நிலையில் அனிதாவின் எலிமினேஷனை ரசிகர்களால் தாங்க முடியவில்லை. இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அதன்பிறகு அனிதா சம்பத்தின் தந்தை இ ற ந்தார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவ்வளவு சோதனைகளுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி அனிதா சம்பத்துக்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளதாம். தற்போது நிறைய படவாய்ப்புகள் குவித்து கொண்டிருக்கிறதாம். அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள்.

தற்போது அனிதா சம்பத் பிரபல முன்னணி நடிகரின் படத்தில் செய்தி தொடர்பாளர் கதாபாத்திரத்திலும், மற்றொரு நடிகரின் படத்தில் நடிகைக்கு தோழி கதாபாத்திரத்திலும் நடிக்க கமிட்டாகி விட்டாராம்.

இந்த இரண்டு படங்களும் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணசித்திர நடிகையாக மாறி விடுவார் என்கிறார்கள். இதற்கு முன்பே விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் அனிதா சம்பத் நடித்திருந்தாலும் பெரிய அளவு அவருக்கு முக்கியத்துவம் இருந்ததில்லை.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவரை விஜய் டிவி பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்துச்சென்று பெரிய வாழ்க்கையை கொடுத்துவிட்டதாம். அதுமட்டுமில்லாமல் விரைவில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.