அஜித் கைக்கு போன தல61 இயக்குனர்கள் லிஸ்ட்.. இந்த மூன்று பேரில் வாய்ப்பு யாருக்கு?

115

நேர்கொண்ட பார்வை……

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் இரண்டாவது முறையாக வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். தற்போது வலிமை படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக ஸ்பெயின் பறக்கிறது படக்குழு.

இதனை தொடர்ந்து தல அஜித் தற்போது தல 61 படத்திற்கான இயக்குனர்கள் வேட்டையில் இறங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்காக கிட்டத்தட்ட மூன்று இயக்குனர்களை இறுதியாக தேர்வு செய்து வைத்துள்ளாராம் தல அஜித்.

அதில் முதலிடத்தில் இருப்பது வினோத் தான். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத்துடன் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அஜித் வட்டாரங்கள்.

அடுத்த இடத்தில் இருப்பது சுதா கொங்கரா. சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு தல அஜித்திடம் ஒரு கதை கூறியுள்ளாராம். ஆனால் கதை கேட்ட பிறகு அஜித் தற்போது வரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லையாம். இதனால் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறார் சுதா.

மூன்றாவது இடத்திற்கு இரண்டு இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வேறு யாருமில்லை. தல அஜித்தை வைத்து ஏற்கனவே பில்லா, ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் ஒரு பக்கம். கிரீடம் என்ற சுமாரான படத்தை கொடுத்த ஏ எல் விஜய் ஒரு பக்கம். இவர்களில் யாரை தல அஜித் தேர்வு செய்யப் போகிறார் என்பதுதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களில் வினோத்தின் ஒர்க்கிங் ஸ்டைல் அஜித்துக்கு பிடித்து விட்டதால் அனேகமாக தல 61 படத்தை வினோத் இயக்கத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறதாம். சொல்ல முடியாது, சிறுத்தை சிவா போல் வினோத்தும் தல அஜித்துக்கு தொடர்ந்து நான்கு படங்கள் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.