லோகேஷ் கனகராஜிடம் பவானி கேரக்டருக்கு விஜய் சேதுபதி வைத்த ஒரே ஒரு கோரிக்கை.. கசிந்த முக்கிய தகவல்!

145

மாஸ்டர்……..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைக் குவித்த படம் தான் மாஸ்டர். தற்போது வரை மாஸ்டர் படம் கிட்டத்தட்ட 240 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதைவிட பேரும் புகழும் கிடைத்தது என்னவோ பவானிக்கு தான்.

கொடூர வில்லனாக விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிவிட்டது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து முன்னணி நடிகர்களும் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்திற்கு முன்பாக லோகேஷ் கனகராஜிடம் ஒரு கோரிக்கை வைத்தாராம். அதன்படி லோகேஷ் கனகராஜ் பவானி கதாபாத்திரத்தை உருவாக்கியதால்தான் பெரிய அளவில் பெயர் கிடைத்ததாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி ஈவு தீவு இரக்கமில்லாத கொடூர வில்லன் என பேட்டிக்கு பேட்டி கூறிக்கொண்டிருந்தார். அப்படி கொடூர கதாபாத்திரம் இருந்தாலும் அதை ரசிக்கும்படி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாராம்.

மேலும் இரண்டு குழந்தைகளை கட்டித் தொங்கவிடும் காட்சியும் வைத்திருந்தாராம் லோகேஷ் கனகராஜ். ஆனால் அந்த காட்சியை முடிந்தவரை நீக்கி விடுங்கள் என லோகேஷ் கனகராஜூக்கு கோரிக்கை வைத்தாராம் விஜய் சேதுபதி. அடிப்பது கூட ஓகே, ஆனால் தூக்கி தொங்கவிடுவது எல்லாம் எனக்கே ஒரு மாதிரி இருக்கிறது என வருத்தப்பட்டாராம் விஜய் சேதுபதி.

அதன்படி லோகேஷ் கனகராஜ் எடிட் செய்து காட்சியை மாற்றி அமைத்து விட்டாராம். மேலும் விஜய் சேதுபதி அடிவாங்கும் போது கூட ஒரு குழந்தை அழுத வீடியோ ஒன்று வைரலானது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். வில்லத்தனத்திலும் ரசிக்கும்படி செய்த லோகேஷ் கனகராஜூக்கு ஒரு சல்யூட்.