நெஞ்சம் மறப்பதில்லை ட்ரைலர் பார்த்த பின் மகேஷ் பாபு, எஸ் ஜே சூர்யாவிடம் பாராட்டியது யாரை தெரியுமா!!

105

நெஞ்சம் மறப்பதில்லை………

மூன்று இயக்குனர்களின் கூட்டணயில் ஆரம்பமான ப்ரொஜெக்ட். கவுதம் மேனன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடிக்கும் படமே நெஞ்சம் மறப்பதில்லை. ரெஜினா கெஸன்ட்ரா, நந்திதா ஸ்வேதா, பாபி சிம்ஹா, பிரேம்ஜி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா. ஜி கே பிரசன்னா எடிட்டிங்.

ஜனவரி 2016 ஆரம்பிக்கப்பட்டு ஜூன் மாதமே முடிந்த படம். எனினும் பல்வேறு காரணங்களால் ஐந்து வருடமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்த வருடம் மார்ச் 5 திரை அரங்கில் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தினை பற்றி எஸ் ஜே சூர்யா பிரபல யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்பொழுது யுவன் படத்திற்கு அருமையாக BGM அமைத்து கொடுத்ததாக சொன்னார். மேலும் ட்ரைலரை மகேஷ் பாபு பார்த்தாராம். அப்பொழுது ஒரு கணம் எஸ் ஜே சூர்யாவை பார்த்தாராம், பின்பு “யுவன் கிழ்ச்சிட்டாருல்ல.” என சொன்னாராம்.

பொதுவாகவே செல்வாவின் படங்கள் வெளியாகும் சமயத்தில் பிளாப் என்பர், ஐந்து ஆறு வருடம் கழித்து தூக்கி வைத்து கொண்டாடுவர் கோலிவுட்டில். இப்படம் 5 வருடம் கழித்து தான் ரிலீஸ் ஆகிறது, எனவே அனைவருக்கும் கட்டாயம் பிடிக்கும், புரியும் என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.