தனுஷை கட்டியணைத்த மாளவிகா மோகன்.. இணையத்தில் சூடுபிடிக்கும் புகைப்படம்!!

97

மாளவிகா மோகன்……

சமீபகாலமாக ஹாலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் என அனைத்து துறைகளிலும் கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது D 43 எனும் பெயரிடாத படத்தை கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார்.

இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடி மாளவிகா மோகன் மற்றும் சுருதி வெங்கட் போன்ற பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

மாளவிகா மோகன் முதல்கட்ட படப்பிடிப்பு மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது, இந்த அனுபவம் எனக்கு மிகவும் புதிதாக உள்ளது என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்க்கும்போது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல் மீண்டும் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றும் அவர்களுடன் மீண்டும் பணியாற்றுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் இதனை தெரியப்படுத்தும் வகையில் தனுஷுடன் எடுத்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவெஞ்சர்ஸ் படக்குழுவினருடன் நடிப்பதற்கு தற்போது தனுஷ் வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.