விஜய்யுடன் 7 வது முறையாக கூட்டணி போட துடிக்கும் பிரபல தயாரிப்பாளர்.. பலத்த யோசனையில் தளபதி!

70

தளபதி விஜய்…..

தளபதி விஜய்யை வைத்து ஏற்கனவே ஆறு படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஒருவர் 7வது முறையாக எப்படியாவது விஜய்யின் கால்ஷீட்டை வாங்கி விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு கோலிவுட் வட்டாரங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறாராம்.

தளபதி விஜய்யின் தற்போதைய சினிமா உயரம் என்ன என்பது அனைவருக்குமே தெரியும். படத்திற்கு படம் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் தன்னுடைய மார்க்கெட்டை விரிவு படுத்தி வருகிறார். கடைசியாக வெளியான மாஸ்டர் படம் கூட பல மாநிலங்களில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

மேலும் விஜய்யின் முந்தைய படங்களின் வசூலை ஓரம்கட்டி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கும்போது விஜய்யை வைத்து படம் தயாரிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. அந்த வகையில் தளபதி விஜய்யின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமான பூவே உனக்காக படத்தை கொடுத்தவர் தான் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி.

அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா போன்ற படங்களை தயாரித்துள்ளார். ஆனால் ஜில்லா படத்தின் போது விஜய்க்கும் சௌத்ரிக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சூப்பர் ஹிட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி சௌத்ரி விரைவில் 100 வது படத்தை தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் ஆர்பி சௌத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் நூறாவது படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், முன்னரெல்லாம் கதைக்காக விஜய் இருந்தார், ஆனால் தற்போது விஜய்யின் வளர்ச்சியை பார்க்கும் போது அவருக்காக கதை எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் அதற்கான பட்ஜெட்டும் தேவைப்படுகிறது. இருந்தாலும் ஏற்கனவே ஆறு முறை அவருடன் இணைந்துள்ளதால் ஏழாவது முறை கண்டிப்பாக விஜய்யுடன் கூட்டணி போடுவேன் என உறுதியாக தெரிவித்துள்ளார் ஆர்பி சௌத்ரி. விஜய்க்கு இந்த விஷயம் தெரிந்தும் மௌனம் காத்து வருகிறாராம்.