காதலர் தினத்தன்று இரட்டை அப்டேட்டை வெளியிடும் ருத்ர தாண்டவம் படக்குழு!

93

திரௌபதி……..

‘திரௌபதி’ படத்தினை இயக்கியதன் வாயிலாக மிகவும் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் ஜி. மோகன். குறிப்பிட்ட சமூகத்தை சாடி, நாடக காதல் என்ற கான்செப்ட்டை பதிவு செய்த படம். தனது முதல் படமாக ப்ரஜின் நடிப்பில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கியவர்.

மோகன் தனது திரௌபதி படத்தின் ஹீரோ ரிச்சர்ட் ரிசி உடன் இணைந்து பணிபுரியும் அடுத்த ப்ராஜெக்ட் தான் ருத்ர தாண்டவம். இப்படத்தில் நாயகியாக டிவி சணல் புகழ் தர்ஷா குப்தா நடிக்கிறார். போலீஸ் வேடத்தில் நம் ஹீரோ நடிப்பது மட்டுமே, இதுவரை வெளியான தகவல்.

ரிச்சர்ட் ரிசி மற்றும் ஜி மோகனுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அமோகமாக இருப்பதால், இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகம். இந்நிலையில் பிப்ரவரி 14 அன்று காலை 9 மணிக்கு பர்ஸ்ட் லுக்கும், மாலை 6 மணிக்கு வில்லன் யார் என்ற அப்டேட்டும் வெளியிடப்போவதாக டீம் அறிவித்துள்ளனர்.

நடக்ககாதலை துகிலுரித்த இயக்குனர் காதலர் தினத்தன்று பட அப்டேட் வெளியிடுவதில் என்ன சூட்சமம் இருக்கும், படத்தின் ஜானர் என்னவாக இருக்கும் என இப்பொழுதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.