காதலருடன் நெருக்கமாக கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட மடோனா செபாஸ்டின்.. 7 வருட காதலாம்!!

136

மடோனா செபாஸ்டின்…….

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் தான் மடோனா செபாஸ்டின். அடிப்படையில் பாடகியான இவர் நாயகியாகவும் தடம் பதித்தார்.

தமிழில் விஜய் சேதுபதியுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழில் மடோனா செபாஸ்டின் நடித்த காதலும் கடந்து போகும், கவன், ஜூங்கா, பவர் பாண்டி, வானம் கொட்டட்டும் போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அடுத்ததாக சசிகுமாருடன் கொம்பு வச்ச சிங்கம்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார் மடோனா செபாஸ்டின்.

28 வயதான மடோனா செபாஸ்டினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் மடோனா கடந்த 7 வருடமாக ராபி ஆபிரகாம் என்பவரை காதலித்து வருகிறாராம். இந்நிலையில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் மடோனா செபாஸ்டின் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டதாம். இன்னும் சில தினங்களில் காதலர்தினம் வர உள்ளதால் தொடர்ந்து ரசிகர்களின் பேவரைட் நடிகைகள் தங்களுடைய உண்மையான காதலரை வெளிக்காட்டி வெறுப்பேற்றி வருகின்றனர்.

இப்பவே இப்படி என்றால் இன்னும் காதலர் தினத்தன்று எப்படி எல்லாம் போஸ் கொடுத்து புகைப்படம் எடுப்பார்களோ தெரியவில்லையே என சிங்கிள்ஸ் நொந்து போயுள்ளார்களாம்.