குக் வித் கோமாளி சிவாங்கிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தேடிபோய் வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்!!

71

சிவாங்கி……

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருக்கும் நடிகர்களை விட யூடியூப் மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் அதிகமாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஒரு ரியாலிடி ஷோவாக உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து பலரும் சினிமாவுக்கு வர ஆரம்பித்து விட்டனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் ஒரு நிகழ்ச்சியில் எந்த ஒரு போட்டியாளரையும் வெறுக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் மற்றும் சிவாங்கி போன்றோர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். மேலும் சினிமாவிலும் களமிறங்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் புகழ் ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகளை பெற்றுள்ளார்.

தற்போது அதே வரிசையில் சிவாங்கியும் முன்னணி நடிகரின் பட வாய்ப்பு ஒன்றை பெற்றுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, விஜய் டிவியில் படிப்படியாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தான்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்ற போது கண்டிப்பாக என்னுடைய அடுத்தப் படத்தில் இதிலிருந்து ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பேன் என கூறியதன் அடிப்படையில் தற்போது சிவாங்கிக்கு அடுத்ததாக நடிக்கும் டான் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த சிவகார்த்திகேயன் நீண்ட நேரம் சிவாங்கி பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மனதார சிவாங்கியை தங்கச்சியாக ஏற்றுக் கொண்டார் என்பதும் கூடுதல் தகவல்.