மாஸ்டருக்கு பின் அதிரடியாக உடம்பை குறைக்கும் VJ ரம்யா.. எலும்பும் தோலுமாக வைரலாகும் புகைப்படங்கள்!!

127

VJ ரம்யா…..

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய VJ ரம்யா, தவிர்க்கமுடியாத தொகுப்பாளினிகளில் ஒருவராவார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டிடிக்கு பிறகு பிரபலமானவரும் இவரே.

அதேபோல் VJ ரம்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள், டிவி நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து ரம்யா சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான திரைப்படத்தில் கூட ரம்யா ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் VJ ரம்யா, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் பல நெட்டிசன்களுக்கு கேலி பொருளாக மாறியுள்ளது.

அதாவது தற்போதுள்ள நடிகர் நடிகை களுக்கெல்லாம் பாடியை மெய்டன் செய்வது முதற்கண் பணியாகிவிட்டது அதிலும் குறிப்பாக நடிகர் என்றால் சிக்ஸ் பேக் நடிகை என்றால் ஒல்லியான உடலமைப்பு என்பது தற்போதைய ஃபேஷனாக திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் பிட்னஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ரம்யா, அதற்கென்றே தனி ஒரு யூடியூப் சேனலயும் நடத்தி வருகிறாராம். இந்நிலையில் 4 வாரத்தில் 2.5 கிலோ எடையை குறைந்துள்ளதாக குறிப்பிட்டு, சில புகைப்படங்களை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனைப் பார்த்த பலர் வியப்படைந்தாலும், சிலர் எப்பொழுதும் போல கேலி செய்து வருகின்றனர். அந்த வகையில் ரம்யாவின் இந்த மாற்றத்தை பார்த்த ஒரு சிலர் ஒரு வித்யாசமும் தெரியல என்றும், இதுக்குமேல உடம்ப குறைச்சா நல்லாவே இருக்காது என்றும் தெரிவித்து வருகின்றனராம்.