8 வருடம் கழித்து மீண்டும் விஜய்க்கு கதை சொல்ல ரெடியாகும் ஸ்டைலிஷ் இயக்குனர்.. ஓகே பண்ணுவாரா தளபதி?

123

ஸ்டைலிஷ் இயக்குனர்……

எட்டு வருடங்களுக்கு முன்பு தளபதி விஜய்க்கு ஸ்டைலிஷ் கதை ஒன்றை சொல்லி போட்டோ ஷூட் பண்ணிய பிறகு கைவிடப்பட்ட படத்தின் கதையை மீண்டும் மெருகேற்றி விஜய்யிடம் சொல்ல உள்ளாராம் ஸ்டைலிஷ் இயக்குனர்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போதைக்கு நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் தளபதி விஜய் தான். படத்திற்கு படம் வியாபாரம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஏன் இந்த சிக்கலான சூழலில் வெளியான மாஸ்டர் படம் வசூலே அதை நிரூபித்திருக்கும்.

இந்நிலையில் அடுத்ததாக தளபதி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக தளபதி 65 படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு தளபதி இறுதியாக கோலமாவு கோகிலா நெல்சன் என்பவரை ஓகே செய்தார்.

தளபதி 65 படம் உறுதியான நிலையில் தற்போது தளபதி 66 படத்திற்கான வேலைகளையும் இடையில் பார்த்து வருகிறாராம் விஜய். இந்த முறை இளம் இயக்குனர்கள் மற்றும் தன்னுடைய பழைய இயக்குனர்களிடம் மீண்டும் கதை கேட்க முடிவு செய்துள்ளாராம் தளபதி விஜய்.

அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தின் கதையை தற்போது இரண்டு மடங்கு மெருகேற்றி வைத்து விரைவில் விஜய்க்கு கதை சொல்ல உள்ளாராம் கௌதம் வாசுதேவ் மேனன்.

ஒரு சில தோல்விகளுக்கு பிறகு மீண்டும் இளம் இயக்குனர் போல் புத்துணர்ச்சியாக காணப்படும் கௌதம் மேனன் இந்த படத்தை மட்டும் ஓகே செய்து விட்டால் தன்னுடைய ரேஞ்சே வேற லெவல் ஆகிவிடும் என விஜய்க்கு கதை சொல்லும் தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம்.