பாரிஸ் ஜெயராஜ் படம் எப்படி இருக்கு? fdfs பார்த்த பின் சந்தானத்தின் மகன் சொன்ன விமர்சனம்!!

738

சந்தானம்……..

மினிமம் கேரண்டி ஹீரோ என்ற பெயரையும் நம் கோலிவுட்டில் சம்பாதித்துவிட்டார் சந்தானம். காமெடியன் டு ஹீரோ அவதாரம் எடுத்துள்ள இவரின் படங்களை சி மற்றும் பி சென்டர் ரசிகர்கள் தான் விரும்பி பார்க்கின்றனர்.

நம் சொந்த விஷயங்களை மறந்து மஜாவாக இரண்டு மணிநேரம் பொழுதை கழிக்க ஏற்றவிதமாக இருக்கும் இவரது படங்கள். ஏ 1 இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் மீண்டும் சந்தானம் இணைந்த படம் தான் பாரிஸ் ஜெயராஜ்.

கானா பாடகர் ரோலில் சந்தானம் நடித்துள்ளார். சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார். ப்ருத்விராஜ், அனைகா சோதி, மொட்டை ராஜேந்திரன், டைகர் தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர்.

இன்று இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று படத்தின் முதல் காட்சியை பார்க்க சந்தானத்தின் மகன், நிபுண் தியேட்டர் வந்துள்ளார். அப்பொழுது அவரிடம் படம் எப்படி என கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் இந்த வீடியோவில் ..