ஜீவா பட ரீமேக் உரிமைக்கு போட்டி போடும் முன்னணி நடிகர்கள்.. அப்படி என்னப்பா இருக்கு அதுல?

113

ஆர்பி சௌத்ரி……….

 

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானவர் தான் ஜீவா. பழம்பெரும் வெற்றி தயாரிப்பாளராக தற்போது வரை வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்பி சௌத்ரியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்பி சௌத்ரி தன்னுடைய சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். ஏன் தளபதி விஜய்க்கு மட்டுமே கி ட்ட த்தட்ட ஆறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர்பி சௌத்ரி சமீபத்தில் தன்னுடைய மகன் ஜீவா மற்றும் அருள்நிதி ஆகிய இருவரையும் வைத்து களத்தில் சந்திப்போம் என்ற கமர்ஷியல் படத்தை தயாரித்திருந்தார். சமீபத்தில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படம் கமர்சியல் ஹிட் அ டி த்தது.

மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதை போக்க சிறந்த திரைப்படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது க ள த்தில் சந்திப்போம். மேலும் நாயகிகளாக மஞ்சிமா மோகன் மற்றும் பி ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.

சூப்பர் ஹிட் நடித்துள்ள இந்த படத்தின் ரீமேக் உரிமையை தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களும் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக் கொ ள்கிறார்களாம். சிறந்த கமர்சியல் படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்பதை களத்தில் சந்திப்போம் படம் நிரூபித்துவிட்டதாம்.

கண்டிப்பாக களத்தில் சந்திப்போம் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என நம்பி மற்ற மொழிகளில் டப்பிங் செய்யாமல் இருந்ததற்கு தற்போது ஆ ர்பி சௌத்ரிக்கு செம லாபம் கிடைத்துள்ளது.