உடல் இளைத்து எலும்பும் தோலுமாக மாறிய வடிவேலு.. வைகை புயல் வேகத்தில் வைரலாகும் புகைப்படம்!!

138

வடிவேலு…….

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என பலருக்கு முன்னோடியாக இருக்கும் வைகைப்புயல் வடிவேலுவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்களை சோகத்தில் ஆ ழ் த்தியுள்ளது.

நாகேஷ், கவுண்டமணி செந்தில் போன்ற காமெடி நடிகர்களுக்கு பிறகு மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் வடிவேலு. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவர்களை விட அதிகமாகவே கொண்டாடப்பட்டார்.

மற்றவர்களை காப்பி அடிக்காமல் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு காமெடியில் வெற்றிக் கொடி நாட்டியவர். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இளைஞர்களின் மீம்ஸ் குருவாகவும் இருந்து வருகிறார்.

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப அப்போதே தன்னுடைய முக பாவனைகளையும், காமெடி வசனங்களையும் கொடுத்துள்ள வடிவேலுவை மீம்ஸ் மூலம் உலக அளவில் கொண்டாட வைத்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக எதிர்பார்த்த அளவு படங்களில் நடிக்காத வடிவேலுமீது ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் கூட வடிவேலு ஒருவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. அதன்பிறகு பேச்சு மூச்சு இல்லை.

தமிழ் சினிமாவில் இன்னமும் வடிவேலு இடம் அப்படியேதான் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் வடிவேலு ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் கொஞ்சம் நிலைத்து உடல் சோர்வாக காணப்படுகிறார் வைகை புயல் வடிவேலு