சித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்த கமல் மகள் ஸ்ருதி ஹாசன்.. ஓப்பனாக போட்டுக்கொடுத்த பிரபலம்!!

91

சித்தார்த்……..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபல நடிகர் நடிகைகளாக வலம் வரும் சித்தார்த் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் லிவிங் டுகெதர் முறையில் நீண்ட நாட்கள் வாழ்ந்து வந்ததை பிரபலம் ஒருவர் ஓபன் ஆக வீடியோவில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமலஹாசன். இவருடைய மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில்தான் வெளிநாடு காதலருடன் தன்னுடைய பழைய காதலை முறித்து விட்டு வேறு ஒருவருடன் புதிய காதலை தொடங்கியுள்ளார்.

இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சித்தார்த் என்பவருடன் நடிகை ஸ்ருதிஹாசன் நீண்ட நாட்களாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தாராம்.

தமிழ் சினிமாவுக்கு முன்பே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ருதிஹாசன். அப்போது சித்தார்த்துடன் நட்பாக பழகி பின்னர் காதலில் விழுந்தாராம். காதல் மோகத்தில் இருவரும் நீண்ட நாட்கள் லிவிங் டுகெதர் முறையில் ஒரே அப்பார்ட்மென்டில் வசித்து வந்தார்களாம்.

முன்னதாக சித்தார்த் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக ஏற்கனவே சில வதந்திகள் கோலிவுட் வட்டாரங்களில் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சித்தார்த் ஸ்ருதிஹாசனுடன் இருந்ததை பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய யூடியுப் வீடியோவில் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே பயில்வான் தன்னுடைய பத்திரிகை வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான அதேசமயம் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர்களின் கிசுகிசுக்களை அம்பலப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.