பிக்பாஸ் ரம்யாவிடம் ரகளை செய்த நபர்! பொது இடத்தில் நடந்த சம்பவம்! கூட்டத்தில் சலசலப்பு!

63

ரம்யா பாண்டியன்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரம்யா பாண்டியன்.

ஜோக்கர் படத்தில் நடித்திருந்தாலும் தன் வீட்டு மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி அதனால் ரசிகர்களை கவர்ந்து பின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இப்போது மிக பிரபலம் ஆகிவிட்டார்.

ரம்யா காதலர் தினம் அன்று சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரோட்டரி சங்கம் நடத்திய மரம் நடு விழாவில் கலந்து கொண்டார்.

FALL IN LOVE WITH TREES என்னும் வாசகம் அடங்கிய ரம்யா பாண்டியன் ஓவியத்தை அவருக்கு பரிசாக அளித்தனர். உள்ளூர்வாசி ஒருவர் என்னிடம் சொல்லாமல் ஏன்? என்ன நடக்கிறது முதலில் என்னிடம் கூறுங்கள் என ரகளையில் ஈடுபட்டார்.

இதனால் சில நிமிடம் பரபரப்பு சூழ ஒருவழியாக அவரை சமாளித்தனர். பின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் லுங்கியுடன் வந்த அந்த நபரை சிறப்பு விருந்தினர் பட்டியலில் சேர்த்து வரிசையில் நிற்க வைத்ததும் அமைதியானார். அவர்களோடு சிரிப்புடன் பேசிய ரம்யா பாண்டியன் புன்னகை முகத்தோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விரைந்து வெளியேறினர்.