தலயா! தளபதியா! என்ற கேள்விக்கு, யோசிக்காமல் ஒருவரை தேர்ந்தெடுத்த நடிகை காஜல் அகர்வால்..! வீடியோவுடன் இதோ..!!

104

காஜல் அகர்வால்…

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், தமிழில் கடைசியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் நடிகை காஜல் அகர்வாலுக்கும் கவுதம் கிட்ச்லு என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

அதுமட்டுமின்றி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் என்ற சீரிஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை காஜலிடம், தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் உங்களுக்கு யார் மேல் Crush? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த காஜல், அஜித் மற்றும் விஜய் என இருவரையும் கூறியுள்ளார். இதில் ஒருவரை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றதும் தளபதி விஜய்யை தேர்ந்தெடுத்துள்ளார்.