“ப்ப்பா….” – துளி மேக்கப் இல்லாமல் ராஷ்மிகா – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

127

ராஷ்மிகா மந்தனா…

தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்து, தென்னிந்தியாவில் புகழ் கொடியை நாட்டியவர் ராஷ்மிகா மந்தனா. அடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அவர் அறிமுகமாகவுள்ளார். ராஷ்மிகா மந்தனாவின் தமிழ் அறிமுகத்தை இங்குள்ள ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமில்லாமல் ஹிந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘மிஷன் மஞ்சு’ என்ற படத்தில் நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் பிரபல பஞ்சாபி பாடகர்களான உச்சன அமித், பாட்ஷா, ஜொனிதா காந்தி உள்ளிட்டோர் சேர்ந்து ஒரு ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர்.

டாப் டக்கர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை ஒய்.ஆர்.எஃப் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆண்மையில் இந்த ஆல்பத்திற்கான டீசர் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் ராஷ்மிகா மந்தனா மிகவும் கவர்ச்சிகரமாகவும், படு ஸ்டைலாகவும் தோன்றுவது பல ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அவரது கொஞ்சும் முக பாவனைகளை கண்டு இந்தியாவே மயங்கிப் போயுள்ளது. இந்நிலையில், முட்டிக்கு ஆங்கிளட் போட்டுக்கொண்டு துளி மேக்கப் இல்லாமல் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.