தளபதி விஜய்யாக மாறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர், ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் வீடியோ..!

73

டேவிட் வார்னர்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

50 % இருக்கைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய்யாக அவர் மாறியுள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ஆம், தொடர்ந்து Faceapp மூலமாக பிரபல இந்திய நடிகர்களாக அவர் மாறி பதிவிட்டு வரும் வீடியோவை தொடர்ந்து தற்போது இந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)