திடீரென்று கமிஷனர் ஆப்பிஸுக்கு சென்ற தல அஜித், என்ன காரணம் தெரியுமா?

73

அஜித்…

தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் வேண்டி வந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் தல அஜித் பொது இடத்தில் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்த செயலை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று தல அஜித் Rifle Shooting பயிற்சிக்காக Rifle Club செல்ல நினைந்து கமிஷனர் ஆப்பிஸுக்கு சென்றுள்ளார்.

மேலும் அங்கிருந்த Rifle Club வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என பின்னர் தான் அவருக்கு தெரியவந்துள்ளது.

இதனிடையே தல அஜித்தை கண்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துள்ளனர், அவரும் முகம் சுழிக்காமல் அனைவருடன் செல்பி எடுத்துள்ளார்.