அஜித்திற்கு இணையாக கார் ஓட்டிய பிரபல காமெடி நடிகர்.. !!

83

செந்தில்……

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியால் புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்களது காம்பினேஷனில் வந்த காட்சிகள் அனைத்துமே இன்று வரைக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வயிறு குலுங்க சிரிக்க வைத்து தான் வருகிறது .

காமெடியில் கலக்கிய செந்திலை பற்றி அவருடைய நண்பர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார் அவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை பார்ப்போம்.

இன்றும் பொட்டி கடைக்கு சென்று வாழைப் பழத்தைப் பார்த்தாலே அனைவருக்கும் ஞாபகம் வந்துவிடும் செந்தில் செய்த காமெடி அந்த அளவிற்கு இவர் காமெடி ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிற்கு அண்ணே என்று கவுண்டமணி கூப்பிடு வசனத்துக்கு பிறகு தான் பலருக்கும் அண்ணன் என்கிற ஒரு நட்பு உறவு உள்ளதே ஞாபகம் வந்தது என்று கூட கூறலாம்.

அஜித்துக்கு எப்படி கார் மீது அளவுகடந்த பிரியம் உள்ளதோ அதே போல் தான் நடிகர் செந்திலுக்கும் கார் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது.

சொல்லப்போனால் அஜித் அளவிற்கு இவர் ப ய ங்க ரமாக கார் ஓட்டுவார்.

எந்த அளவிற்கென்றால் பிரிமியர் பத்மினி பியட் கார் தான் செந்திலுக்கு மிகவும் பிடித்த கார். ஒரு படப்பிடிப்பின் போது ட்ரெயினை விட்டதால் தனக்கு பிடித்த கார் ஆன பத்மினி காரை எடுத்து ரயிலை விட வேகமாக படப்பிடிப்பு தளத்திற்கு முன்பே சென்றுள்ளார். அந்த அளவிற்கு மிக வேகமாக கார் ஓட்டக் கூடியவர் செந்தில்.

ஒரு சில காலங்கள் பிறகு காரில் சென்று பெரிய வி பத் து ஏற்பட்டதால் அப்போதிலிருந்து கார் ஓட்டும் பழக்கத்தை தவிர்த்துள்ளார். அதன் பிறகுதான் அவருடைய காருக்கு டிரைவரை வைத்துள்ளார்.

சினிமாவை தாண்டி நிஜத்திலும் செந்தில் ஒரு நல்ல மனிதர் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம் பலமுறை செந்தில் நாங்கள் எல்லோரும் திரையில் தான் நடிக்கிறோம். ஆனால் திரையில் கூட உண்மையாக நடிப்பவர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தான் என கூறியுள்ளார்.

ஒரு சில காலங்கள் சினிமாவில் சினிமாவை விட்டு விலகியிருந்த செந்தில் தற்போது தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு வந்தார்.