3 வருடத்திற்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் லிங்குசாமி.. கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிடாதீங்க பாஸ்!

96

லிங்குசாமி……

2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் ஏன் தோ ல்வி யடைந்தது என்பது தற்போதுவரை ரசிகர்களுக்கு பு ரி யாத புதிராகவே இருந்து வருகிறது.

ஆனால் அதன் பிறகு சூர்யா மற்றும் லிங்குசாமி இருவரும் தங்களது கேரியரில் இவ்வளவு பெரிய சோ த னையை சந்திப்போம் என யோசித்துக் கூட இருக்கமாட்டார்கள். அந்த அளவு கடந்த சில வருடங்களாக இருவரின் நிலைமை மிக மோ சம்.

சூர்யாவும் தொடர்ந்து பல படங்களில் நடித்தும் எதுவுமே சரியாக செல்லவில்லை. ஆனால் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் கடந்த சில வருடங்களாக சூர்யா இ ழந் ததை எல்லாம் மீட்டுக் கொடுத்தது.

ஆனால் இன்னமும் லிங்குசாமிக்கு அந்த நேரம் வரவில்லை போல. அஞ்சான் படத்திற்கு பிறகு அவர் விஷாலை வைத்து தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் படமான சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார்.

அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குநராக களம் இறங்கியுள்ளார் லிங்குசாமி. இந்தமுறை தமிழில் இல்லை. தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் ராம் போத்தனி என்பவருடன் சேர்ந்து ஒரு படம் இயக்க உள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. ஒரு காலத்தில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த லிங்குசாமி மீண்டும் தன்னுடைய கேரியரை பிக்கப் செய்வாரா என பொருத்திருந்து பார்ப்போம்.