ஷங்கரை கவர்ந்த இளம் நடிகை.. அடுத்த பட வாய்ப்பை அள்ளி கொடுத்த சம்பவம்!!

129

ஷங்கர்……..

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் இந்த ஒரு நடிகைதான் இருப்பதைப்போல மொத்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியன் 2 படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு தற்போது ஷங்கர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரணுடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தை தில் ராஜூ என்ற தயாரிப்பாளர் தயாரிக்கிறார்.

இந்த படமும் பிரமாண்டமாக உருவாக உள்ளதாம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் ஷங்கரிடம் விவரமான கண்டிஷன் ஒன்றைக் போட்டுள்ளது. முதலில் உங்களுக்கு எவ்வளவு பட்ஜெட் வேண்டுமா சொல்லிவிடுங்கள் எனவும், அதற்கு மேல் பத்து பைசா கூட செலவு செய்ய மாட்டேன் என தயாரிப்பாளர் எழுதி வாங்கி விட்டாராம்.

இதனால் தன்னுடைய அடுத்த படத்தை பார்த்து பார்த்து சிக்கனமாக செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளார் ஷங்கர்.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் தற்போதைக்கு சென்சேஷன் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஷ்மிகா மந்தனா ஷங்கர் படத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

என்னமோ தென்னிந்திய சினிமாவில் வேறு எந்த நடிகையும் இல்லாதது போல எல்லாரும் ரஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்ய காரணம் என்ன என்பது தெரியாமல் கோலிவுட் வட்டாரமே குழம்பிக் கிடக்கிறதாம்.