ரசிகர்களுக்கு ஜொள்ளு விட்டு பதில் சொன்ன பிரியா வாரியர்!!

78

பிரியா பிரகாஷ் வாரியர்………

ஓவர் நைட்டில் உலக புகழ் பெறுவார்கள் என்று சொல்வார்கள் அல்லவா. அப்படி ஒன்றுதான் பிரியா பிரகாஷ் வாரியர் என்பவரின் வாழ்க்கையில் நடந்துள்ளது. மலையாளத்தில் வெளியான அடர் லவ் படத்தில் ஒரே ஒரு கண்ணடிக்கும் காட்சியின் மூலம் மிகப் பிரபலமாகி விட்டார்.

உடனடியாக பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என தயாரிப்பாளர்கள் அவரை சுற்றிவளைத்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் அவர் நடித்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சில வாய்ப்புகளும் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறதாம். அம்மணி கிளாமர் காட்ட தயங்குவதில்லை என்பதால் அதிர்ஷ்டம் புயல் வேகத்தில் அடித்துக் கொண்டிருக்கிறது.

சமீபகாலமாக நடிகைகள் அனைவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்து வருகின்றனர். அதுவும் ஏதாவது ஒரு பட ரிலீஸ் என்றால் ரசிகர்கள் தங்களிடம் விருப்பமான கேள்விகளை கேட்கலாம் எனவும் ப்ரோமோசன் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பில் வந்த பிரியா வாரியர் இடம், ரசிகர் ஒருவர் உங்கள் உதட்டை எப்படி கடிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

இந்த கேள்வியை கேட்டதற்கு மற்ற ரசிகர்கள் எப்படியும் பிரியா பிரகாஷ் வாரியர் கண்டபடி திட்டுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நடந்த கதையே வேறு. சொல்லித் தருகிறேன் வாருங்கள் என அவர் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.