திருமணம் நடக்க வேண்டி பரிகாரம் செய்த சிம்பு: வைரலாகும் புகைப்படம்!

86

சிம்பு……

தனக்கு திருமணம் நடக்க வேண்டி சிம்பு பரிகாரம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் ஒரு சோகமான ஆண்டாக கடந்த 2020 ஆம் ஆண்டு அமைந்துவிட்டது. ஒருவழியாக அனைவரது வாழ்விலும் விடிவு காலம் பிறக்கும் வகையில், 2021 ஆம் ஆண்டும் பிறந்துவிட்டது.

ஒவ்வொருவரும், அவரவர் வாழ்க்கையில், நிகழ்ந்த கசப்பான சம்பவங்களை மறந்து, இனி சந்தோஷம் மட்டுமே நிலைக்க வேண்டி இன்று கோயில்களில் பிரார்த்தனை செய்து வழிபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிம்புவும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயிலில் வழிபாடு செய்துள்ளார். ஆம், உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சிம்பு, தனது நெற்றியில் பட்டை போட்டுக்கொண்டு பைஜாமா உடையில் கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்கிறார்.

அவருடன், அவரது நெருங்கிய நண்பர் மகத்தும் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த நிலையில், சிம்பு மறுபடியும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பிரசித்த பெற்ற கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி, வழிபாடு செய்துள்ளார்.

தனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி பரிகாரம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு தனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்று நாயிடம் கூறும் வீடியோ வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பத்து தல, மாநாடு, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து நடித்த மஹா படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.