சிம்புவை புரட்டி எடுக்க போகும் ஸ்டைலிஷ் இயக்குனர்.. எ தி ர்பார்ப்பை எகிற வைக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!!

109

சிம்பு………..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளிவந்த ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

மேலும் கௌதம் மேனனின் இயக்கத்தில், சிம்புவின் நடிப்பில் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் சிம்புவின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் சிம்புவின் செகண்ட் இன்னிங்சில் சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சிம்புவும் கௌதம் மேனனும் இணைந்து புதியதாக படமொன்றில் கமிட்டாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. அதாவது சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள படம்தான் ‘பத்து தல’. இந்தப் படத்தை கிருஷ்ணன் இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில்தான் கௌதம் மேனனும் நடிப்பதாக தெரிகிறது.

ஏனென்றால் கௌதம் மேனனிடம் பலமுறை அசோசியேட் டைரக்டராக கிருஷ்ணன் பணிபுரிந்திருக்கிறாராம். மேலும் கௌதம் மேனனிடம் கிருஷ்ணன் இந்தப் படத்தைப் பற்றி பேசியபோது கௌதம் சிம்பு கூட நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

இதற்கு காரணம் என்னவென்று கௌதம் மேனனிடம் கேட்டதற்கு சிம்பு கேமரா முன் காட்டும் வித்தை தான் என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ஆனாலும் பத்து தல படத்தில் கௌதம்மேனன் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

எனவே, இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலர் சிம்புவும் கௌதம் மேனனும் நேருக்கு நேர் திரையில் மோதவிருக்கும் காட்சிகளை காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.