காஜல் அகர்வால் தெறித்து ஓடிய கதாபாத்திரத்தில் கமிட்டான சினேகா.. 60 வயதெல்லாம் ஒரு மேட்டரே இல்லையாம்!!

108

சினேகா………….

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து தற்போது ரீ-என்ட்ரி கொடுத்து வருபவர் சினேகா. ஆரம்ப காலத்தில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் வந்ததால் இவருக்கு மாற்ற நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.

சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றார். தற்போது சினேகா தெலுங்கு பிரபல முன்னணி நடிகருடன் ஜோடி போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவுடன் சினேகா ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சினேஹாவிற்கு முன்பே படக்குழுவினர் கேத்தரின் தெரசா மற்றும் காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆனால் கேத்தரின் தெரசா மற்றும் காஜல் அகர்வால் இருவரும் 60 வயது பாலகிருஷ்ணாவின் வயதை சுட்டிக்காட்டி அவருடன் ஜோடியாக நடிக்க மாட்டோம் என கூறியுள்ளனர். அதே வயதுடைய சிரஞ்சீவியுடன் காஜல்அகர்வால் கைதி 150 எனும் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் ஏன் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடிப்பதற்கு சம்மதிக்க வில்லை என்பது தான் அனைவருக்கும் தெரியாத புதிராக உள்ளது. ஒருவேளை பாலகிருஷ்ணாவுக்கு தெலுங்கு சினிமாவில் தற்போது பெரிய அளவில் மவுசு இல்லாததால் காஜல் அகர்வால் நடிப்பதற்கு சம்மதிக்க வில்லை என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஆனால் சினேகா அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படத்தின் கதாபாத்திரம் தனக்கு பிடித்து உள்ளதாக தெரிவித்து நடிக்க சம்மதித்துள்ளார். தற்போது இந்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.