இனிமேல் அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.. இயக்குனர்களிடம் கறாராக பேசிய ஜோதிகா!

76

ஜோதிகா……..

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த ஜோதிகா, 2006ஆம் ஆண்டு நீண்ட நாட்களாக காதலித்த நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு, தற்போது வரை நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வருகின்றனர்.

மேலும் திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா நடிப்பதை முழுவதுமாக நிறுத்தியதோடு குடும்ப பெண்ணாகவே மாறிவிட்டார். இதனால் ஜோதிகாவின் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தனர்.

தற்போது ஜோதிகா ஸ்ட்ராங்கான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார். அதேபோல் ஜோதிகா தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த படம் தான் ‘36 வயதினிலே’. இதனைத் தொடர்ந்து ஜோதிகா பல படங்களில்நடித்துக் கொண்டிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி படம் அமையவில்லை.

இதற்கெல்லாம் காரணம் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘மொழி’ படத்தில் ஜோதிகா மாற்றுத்திறனாளியாக நடித்தது தான், ஜோதிகா செய்த மிகப்பெரிய தவறு என்று அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் தற்போது உண்மையை உடைத்து கூறியுள்ளாராம்.

ஆகையால் ஜோதிகா, தன்னை அணுகும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் ‘இனிமேல் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன்’ என்று கறாராக கூறி வருகிறாராம்.

இருப்பினும் மொழி திரைப்படமானது வசூல் ரீதியாகவும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.