பதவி உயர்வு பெற்ற பிகில் பட நடிகர்!

55

ஐஎம் விஜயன்……..

பிகில் பட த்தில் நடித்த நடிகர் ஐஎம் விஜயன் கேரள காவல் துறையின் அசிஸ்டண்ட் கமாண்டன்ட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஷாந்தம் என்ற படத்தின் மூலம் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தமிழில் விஷால் நடிப்பில் வந்த திமிரு படத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டிக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மலையாள சினிமாவில் 20க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இவ்வளவு ஏன், தளபதி விஜய்யின் நடிப்பில் திரைக்கு வந்த பிகில் படத்தில் நடித்துள்ளார். மைக்கேல் ராயப்பனை குத்தி கொலை செய்யும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.

கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த விஜயன் கால்பந்து விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால், தனது 17ஆவது வயதில், கேரளா காவல் துறையில் கால்பந்தாட்ட கிளப்பில் இணைந்தார். ஆக்ரோஷமாக கால் பந்து விளையாடும் விஜயன், சர்வதேச அளவில் 12 நொடிகளில் கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய கால்பந்தாட்ட அணியின் Player Of The Year என்ற பட்டத்தை பெற்ற முதல் வீரராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து விலகினார். இதுவரை 40 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடியுள்ள விஜயன் 29 கோல்களை அடித்துள்ளார். இந்த நிலையில், கேரளா காவல் துறையின் அசிஸ்டண்ட் கமாண்டன்ட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அவரே பதிவு செய்துள்ளார்.