விக்ரமுக்கு ஜோடியான வாணி போஜன்.. என்ன படம் தெரியுமா ?

95

விக்ரம்……

விக்ரம் நடிக்கும் சியான்60 படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடாரம் கொண்டான் படத்தைத் தொடர்ந்து விக்ரம், துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில், இந்தப் படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. இந்தப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான்60 பட த்தில் நடிக்க இருக்கிறார்.
இதில், சியான் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் நடிக்கிறார்.

கோப்ரா பட த்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலமாக சியான்60 படத்தையும் தயாரிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் பட த்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில், இந்தப் பட த்தில் சியானுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோப்ரா பட த்தின் படப்பிடிப்பு ரஷ்யா நாட்டில் உள்ள மொராக்கோ பகுதியில் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர். சியான் விக்ரமும் விரைவில் மொராக்கோ செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.