மூன்று நாட்களில் சக்ரா படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!!

81

சக்ரா….

எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமை அன்று வெளியான படம் சக்ரா.

சிறந்த கதைக்களம், மற்றும் நல்ல திரைக்கதையால் தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா படம் வெளியாகி நேற்றுடன் நான்கு நாட்கள் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் மூன்று நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

இதில் சக்ரா படம் தமிழகத்தில் மட்டுமே 5.75 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் இந்தியளவில் மொத்தம் 11.15 கோடி வசூல் செய்துள்ளது.

முதல் நாளில் கிடைத்த வரவேற்பு வாரத்தின் இறுதியில் இல்லாததால், வசூல் கொஞ்சம் குறைந்துள்ளது என்றும் சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது.