அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் இணைந்து கலக்கும் அன்பிற்கினியாள் ட்ரைலர்..!

79

அன்பிற்கினியாள் டிரைலர்…

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவனிக்கப்படும் ஹீரோ மற்றும் இயக்குனராக வலம் வந்த அருண்பாண்டியன் கடந்த சில வருடங்களாக நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டு படங்களை விநியோகம் செய்யும் வேலையை செய்து வந்தார்.

இந்நிலையில் தற்போது அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவரது உறவினர் மகள் ரம்யா பாண்டியன் என்பவரும் கவனிக்கப்படும் நாயகியாக உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில் மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஹெலன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அருண்பாண்டியன்.

அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வர முடியவில்லை. அவர் நடித்த படமும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் எப்படியாவது தன்னுடைய மகளை முன்னணி நாயகியாக உயர்த்திவிட வேண்டும் என இந்த முடிவை எடுத்துள்ளார் அருண்பாண்டியன்.

மலையாளத்தில் வெளியான ஹெலன் திரைப்படம் தந்தை மற்றும் மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம். தற்போது அதே படத்தை தமிழுக்கு ஏற்றவாறு சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து அன்பிற்கினியாள் என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர்.

அன்பிற்கினியாள் படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு அருண்பாண்டியன் நடிப்பு இந்த ட்ரெய்லரில் வேறு அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.