பாகுபலி படத்தை முந்திய தளபதி விஜய்யின் மாஸ்டர், தென்னிந்திய அளவில் படைத்த சாதனை..!

84

மாஸ்டர்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன திரைப்படம் தான் மாஸ்டர்.

மாஸ்டர் பட பாடல்கள், டீசர் என இப்படம் சம்மந்தப்பட்ட அனைத்துமே இந்தியளவில் செம ட்ரெண்டானது. சமீபத்தில் வாத்தி கமிங் பாடலுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நடனமாடியது பெரிய அளவில் வைரலானது.

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு விஜய்யின் மாஸ்டர் பட டீஸர் வெளியானது, இப்படத்தின் டீஸர் வெளியான நாள் முதலே பல சாதனைகள் படைத்து வந்தது.

அந்த வகையில் தற்போது மாஸ்டர் டீசர் பாகுபலி படத்தின் தெலுங்கு ட்ரைலர் பார்வையாளர்களை விட அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதனால் தென்னிந்திய அளவில் அதிக பார்வையாளர்கள் பெற்றுள்ள டீஸர் என்ற சாதனையை படைத்துள்ளது மாஸ்டர்.