ஜகமே தந்திரம் டீசரில் தனுஷின் பெயரை போடாமல் வெளியிட்ட படக்குழு.. கடுப்பான தனுஷின் ரசிகர்கள்!!

96

ஜகமே தந்திரம்…

ஒய் நாட் ஸ்டுடியோஸ், சஷிகாந்த் தயாரிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.

இப்படத்தின் டீசர் நேற்று காலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும், படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பதால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

இதன்குறித்து சமீபத்தில் தான் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து ஜகமே தந்திரம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என உங்களை போல் நானும் நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வெளியான ஜகமே தந்திரம் படத்தின் டீசரில் தனுஷின் பெயரை குறிப்பிடாமல் வெளியாகியுள்ளது.

ஆம் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ், தயாரிப்பாளர் சஷிகாந்த் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என முன்னணி பிரபலங்களின் பெயரை குறிப்பிட்டிருந்த நிலையில், படத்தின் ஹீரோ தனுஷின் பெயரை என போடவில்லை என்று கடுப்பில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.