மீண்டும் தளபதி விஜய்யுடன் இணையும் இயக்குனர் அட்லீ..! மறைமுகமாக அவர் அளித்துள்ள பதில்..!

94

தளபதி விஜய்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான மாஸ்டர் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி 66 படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி இப்போதே பெரியளவில் பேசப்பட்டு வருகிறது, அதில் இயக்குனர்கள் அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் பெயர்கள் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது இயக்குனர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய்யின் வீடியோ ஒன்றை பதிவிட்டு ஹார்ட் சிம்பல் போட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் தளபதி 66 படத்தை நீங்களே தான் இயக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.